கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த யாழ். இந்து கல்லூரி மாணவன்

கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த யாழ். இந்து கல்லூரி மாணவன்

கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த யாழ். இந்து கல்லூரி மாணவன்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 10:28 pm

தற்போது வெளியாகியுள்ள உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின் பிரகாரம் கணித பிரிவில் யாழ் இந்து கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

2014 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இதில் இம்முறை கணித பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ் மாவட்டத்தின் இந்து  கல்லூரி மாணவன் பாக்கியராஜா தாருகீசன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை கலைப்பிரிவில் கொழும்பு மாவட்டத்தின் விசாகா கல்லூரி மாணவி ஷவிதி நெத்சலா பத்திரண அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவில் காலி சவுத்லண்ட் மகளிர் கல்லூரி மாணவி பியுமி  தனஞ்சனா  தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளதுடன் உயிரியல் பிரிவில் மாத்தறை சுஜாதா மகா வித்தியாலயத்தின் மாணவி ஹிருணி உதார தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்