உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியும் – ப.தி

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியும் – ப.தி

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியும் – ப.தி

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 5:45 pm

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான மீளாய்வு விண்ணப்பங்கள் பெறுபேறு ஆவணங்களுடன் அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தனியார் பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பங்களை எதிர்காலத்தில் அச்சு ஊடகங்களில் பிரசுரிக்கவுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளர்.

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்