உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 12:47 pm

பரீட்சைகள் திணைக்களத்தால் நேற்று வெளியிடப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் முதலம் இடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை, நேற்று வெளியிடப்பட்ட கல்வி பொது தாராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

கொழும்பு மற்றும், ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேரடியாக வந்து பெற்று கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பாடசாலைகளுக்கான பெறுபேறுகள் தபால் ஊடாக இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதனிடையே, சீரற்ற வானிலைக் காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும் சில மத்திய நிலையங்களின் மதீப்பீட்டு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதிக மழையால் பாதிக்கப்பட்டுள்ள 11 நகரங்களிலுள்ள மதீப்பீட்டு நிலையங்களில் இன்று ஆரம்பிக்கவிருந்த மதீப்பீட்டு பணிகளே பிற்போடப்பட்டுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவிக்கின்றார்.

கடந்த வாரம் நிறைவுப் பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 54 மத்திய நிலையங்களில் இன்று ஆரம்பிக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்