11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2014 | 9:52 am

சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிவிரின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிடுகின்றார்.

மாத்தளை, பதுளை, கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மண்சரிவு அபாயம் அதிகளவில் காணப்படுகின்ற பகுதிகளில் வாழ்கின்ற மக்கள், அங்கிருந்து தற்காலிகமாக வெளியேறுவது பாதுகாப்பான நடவடிக்கையாகும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நேற்றிரவு அறிவித்தல் விடுத்துள்ளது.

இத்தகைய பிரதேசங்களில் அதிக மழை பெய்கின்றமையே கூடுதல் மண்சரிவு அபாயம் நிலவுவதற்கு காரணமாகும் என்றும் மண்சரிவு ஆய்வுப் பிவிரின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்