வெள்ளத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

வெள்ளத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

வெள்ளத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2014 | 5:12 pm

வெள்ளம் காரணமாக ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

பலத்த மழையை அடுத்து ஆறு ஒன்று பெருக்கெடுத்ததால் பல்கலைக்கழகத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக தென்கிழக்குப் பல்லைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கட்டடங்களுக்குள் சுமார் நான்கு அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கிக்கிடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகளை தொடர முடியாத நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் கூறினார்.

இதற்கமைய பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த சுமார் 1,500 மாணவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும், பரீட்சை நடைபெறவுள்ள மாணவர்களுக்கான புதிய திகதி விபரங்கள் அறிவிக்கப்படும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்