வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றப்போவதில்லை – மைத்திரிபால சிறிசேன

வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றப்போவதில்லை – மைத்திரிபால சிறிசேன

வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றப்போவதில்லை – மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2014 | 11:24 am

தாம் உருவாக்கும் புதிய அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புச் சபையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

வெலிகம பகுதியில் நேற்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறினார்.

[quote]வடக்கில் இராணுவத்தை அகற்றுவதற்கு நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை. யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்கள், முப்படை தளபதிகள் வெளிநாடுகளில் தூதர்களாக செயற்படுகின்றனர். எமது புதிய அரசாங்கத்தில் யுத்த வெற்றியை எதிர்கொண்ட தளபதிகளை மீள நாட்டிற்கு அழைத்து தேசிய பாதுகாப்புச் சபையை நாம் பலப்படுத்துவோம். இந்த நாட்டை பிளவுபடுத்த விடமாட்டோம். முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்களை நாம் முற்றாக  நிராகரிக்கின்றோம் என்பதை தெளிவாக கூறுகின்றோம்.
[/quote]

இந்த நிகழ்வில் அர்ஜுன ரணதுங்கவும் கருத்து வெளியிட்டார்.

[quote]எமது மேடையை தீயிட்ட நபர்களை பொலிஸார்  பிடித்துச் சென்றவுடன், தென் மாகாணத்திலுள்ள பிரதி அமைச்சர் ஒருவர் சென்று அவர்களை வெளியே எடுக்கின்றார். இது மிகவும் சிறந்த செயலாகும். இன்று சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். இந்த நாட்டின் பிரதான விமான நிலையத்தின் ஊடாக சிங்கப்பூர் செல்லும் உரிமை அவருக்கு கிடைத்துள்ளது. நான் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் எனின் வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்ய வேண்டும். அங்கேயே அனுமதி வழங்குவார்கள். இவரை பொலிஸார் கைது செய்ய வேண்டிய உத்தரவு இருக்கின்ற சந்தர்ப்பத்தில், விமான நிலையத்திற்கு சென்று வெளிநாட்டிற்கு செல்ல முடியும் எனின் இந்த நாட்டின் சட்டம் தொடர்பில் சிந்தித்து பாருங்கள்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்