லிங்கா படம் பார்க்கச் சென்ற ரசிகர் உயிரிழப்பு

லிங்கா படம் பார்க்கச் சென்ற ரசிகர் உயிரிழப்பு

லிங்கா படம் பார்க்கச் சென்ற ரசிகர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2014 | 5:00 pm

கோவையில் ரஜினியின் லிங்கா படத்தை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் திரையரங்கில் உயிரிழந்துள்ளார்.

கோவையை சேர்ந்த 56வயது ராஜேந்திரன் என்பவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக சிகிச்சைக்காக கோவை அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிறுவயதில் இருந்தே ரஜினியின் ரசிகரான அவர், வைத்தியர்களின் அறிவுறுத்தலையும் மீறி இரவில் யாருக்கும் தெரியாமல் வைத்தியசாலையில் இருந்து தப்பித்து அருகில் இருந்த திரையரங்கில்  லிங்கா படத்தை பார்த்துள்ளார்.

படம் முடிந்து அனைவரும் வெளியேறிய பின்னர் திரையரங்கு ஊழியர்கள் ராஜேந்திரன் இருக்கையிலேயே உயிரிழந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்