மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தவும்; பாகிஸ்தானிடம் பான் கீ மூன் வேண்டுகோள்

மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தவும்; பாகிஸ்தானிடம் பான் கீ மூன் வேண்டுகோள்

மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தவும்; பாகிஸ்தானிடம் பான் கீ மூன் வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2014 | 2:26 pm

மரண தண்டனை வழங்கும் நடவடிக்கையினை நிறுத்துமாறு பாகிஸ்தான் பிரதமரை ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

பெஷாவரில் பாடசாலை மீதான தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கையினை மீள ஆரம்பிக்க பிரதமர் நவாஸ் ஷெரிப் நடவடிக்கை முன்னெடுத்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசி மூலமாக உரையாடலொன்றின் மூலமே பான் கீமூன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக ஐநாவின் பேச்சாளரொருவர் குறிப்பிட்டார்.

ஜனநாயகத்துக்கு முக்கியத்துவளிக்க வேண்டியதுடன் பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென பாகிஸ்தான் பிரதமரிடம் ஐ.நா செயலாளர் நாயகம் கேட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்