பாகிஸ்தானில் மதகுரு ஒருவருக்கு பிடியாணை

பாகிஸ்தானில் மதகுரு ஒருவருக்கு பிடியாணை

பாகிஸ்தானில் மதகுரு ஒருவருக்கு பிடியாணை

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2014 | 2:20 pm

பாகிஸ்தானிய இராணுவத்தினரால் நடத்தப்பட்ட பாடசாலையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க மறுத்த மதகுருவொருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமது மதஸ்தலத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் குறித்த மதகுரு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முக்கியத்துவமற்ற பிரச்சினையொன்றிற்கு தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக குறித்த மதகுரு குறிப்பிட்டுள்ளார்.

குற்றவியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ பாடசாலை மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 133 மாணவர்கள் உட்பட 152 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்