பதுளை மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் மூவரது சடலங்கள் மீட்பு

பதுளை மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் மூவரது சடலங்கள் மீட்பு

பதுளை மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் மூவரது சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2014 | 4:35 pm

பதுளை ரில்பொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் மூவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சிறுவன் ஒருவரது சடலமும், பெண் ஒருவரது சடலமும் ஆண் ஒருவரது சடலமும் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த மழையுடன் கூடிய வானிலையால் பதுளை ரில்பொல பகுதியில் நேற்று ஏற்பட்ட மண் சரிவில் பல வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டனை.

மண் சரிவில் காணாமற்போயிருந்த நான்கு பேரது சடலங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன.

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்