நிஷாந்த முத்துஹெட்டிகம தொடர்பில் 119ற்கு அறிவித்தும் ஏன் கைது செய்யப்படவில்லை?; விசாரணை தொடர்கிறது

நிஷாந்த முத்துஹெட்டிகம தொடர்பில் 119ற்கு அறிவித்தும் ஏன் கைது செய்யப்படவில்லை?; விசாரணை தொடர்கிறது

நிஷாந்த முத்துஹெட்டிகம தொடர்பில் 119ற்கு அறிவித்தும் ஏன் கைது செய்யப்படவில்லை?; விசாரணை தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2014 | 2:44 pm

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் வெளிநாடு சென்றுள்ள பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை, நாடு திரும்பும்போது கைதுசெய்யுமாறு கட்டுநாயக்க மற்றும் மத்தல சர்வதேச விமான நிலையங்களின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.

பிரதியமைச்சர் நாட்டிலிருந்து வெளியேற முன்னர் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்துள்ளதாக நபர் ஒருவர் கூறியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தகவல் கிடைத்த 119 அவசர அழைப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அதுகுறித்து அந்த பிரிவு கவனயீனமாக இருந்ததா என்பது தொடர்பில் ஆராயப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

அவ்வாறு பொலிஸார் செயற்பட்டிருக்கும் பட்சத்தில், பொலிஸ் நிலையமொன்றின் ஊடாக பிரதியமைச்சரை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்காமை குறித்து பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரையின் பேரில், விசேட பிரிவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தரேனும் இந்த விடயத்தில் கடமையை புறக்கணித்திருப்பின், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பத்தேகம நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரபுக்கள் நுழைவாயில் ஊடாக சிங்கப்பூர் பயணமானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்