சீரற்ற வானிலையால் 8 இலட்சம் மக்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 8 இலட்சம் மக்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 8 இலட்சம் மக்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2014 | 9:49 am

மண்சரிவு மற்றும் மழை வெள்ளம் காரணமாக சுமார் எட்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

அத்துடன் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் காணாமல்போனவர்களை மீட்பதற்கான பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கான நிவாரண உதவிகளுக்காக போதியளவில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அரசாங்க ஊழியர்கள் தங்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்ற முன்வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த குறிப்பிடுகின்றார்.

இடர் நிலை​மைகள் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பிலிருந்து குழுக்களை அனுப்பிவைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தலைமையில் இந்த குழு தனது செயற்பாடுகளை மேற்கொகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்