கடும் மழையை அடுத்து 160 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான்பாய்கிறது –  நீ.தி

கடும் மழையை அடுத்து 160 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான்பாய்கிறது – நீ.தி

கடும் மழையை அடுத்து 160 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான்பாய்கிறது – நீ.தி

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2014 | 3:01 pm

அதிக மழையுடனான காலநிலையால் நடுத்தர அளவிலான 160 நீர்த் தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 73 பிரதான நீர் நிலைகளில் 61இல் வான் பாய்வதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிடுகின்றார்.

22 பிரதான நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

களனி, களு மற்றும் நில்வலா ஆறுகளின் நீர்மட்டம் சாதாரண மட்டத்தை எட்டியுள்ளதாக நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் கூறுகின்றார்.

இந்த ஆறுகளை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாயம் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆயினும், மகாவலி மற்றும் மல்வத்து ஓயா ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வெள்ளநிலைமை குறைவதற்கு இன்னும் சில தினங்கள; எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்