உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகும் – ப.தி

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகும் – ப.தி

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகும் – ப.தி

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2014 | 3:29 pm

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை இன்று மாலை வேளையில் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார குறிப்பிடுகின்றார்.

இதன் பிரகாரம் உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் WWW.DOENETS.LK  என்ற இணையத்தளத்தில் இன்று மாலை தரவேற்றம் செய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 96 ஆயிரத்து 313 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இவர்களில் இரண்டு இலட்சத்து 34 ஆயிரத்து 197 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்