இனிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இலங்கை?

இனிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இலங்கை?

இனிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இலங்கை?

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2014 | 1:28 pm

நியூஸிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ”பலோ ஒன்” அடிப்படையில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

இந்நிலையில், இலங்கை அணி 10 விக்கெட்டுகள் கைவசமிருக்கும் நிலையில் 219 ஓட்டங்களால் பின்னிலையிலுள்ளது.

இரண்டாவது இனிங்ஸில் துடுப்படுத்தாடி வரும் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர நிறைவில் விக்கெட் இழப்பின்றி 84 ஓட்டஙகளைப் பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி தனது முதல் இனிங்ஸில் 441 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி 138 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூஸிலாந்து சார்பில் ஜிம்மி நீஷம் மற்றும் நீல் வொக்னர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்