மலையக ரயில் சேவை றம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது –  ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம்

மலையக ரயில் சேவை றம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது – ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம்

மலையக ரயில் சேவை றம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது – ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2014 | 1:29 pm

சீரற்ற வானிலையால் மலையக ரயில் சேவை றம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

மேலும் கொழும்பிலிருந்து கண்டி மற்றும் பதுளை வரையான ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு வரையான ரயில் சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

எனினும் வடக்கு ரயில் மார்க்கத்தில் யாழ். ரயில் சேவை எவ்வித இடையூறுகளும் இன்றி இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்