பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம வெளிநாடு பயணம் (VIDEO)

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம வெளிநாடு பயணம் (VIDEO)

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம வெளிநாடு பயணம் (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2014 | 1:02 pm

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக காலி வந்துரம்ப பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பி்க்கப்பட்டிருந்த பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம இன்று அதிகாலை வெளிநாடு சென்றுள்ளார்.

இந்த தகவலினை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண உறுதிப்படுத்தியுள்ளார்.

பலத்த பாதுகாப்பு பெற்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நிஷாந்த முத்து ஹெட்டிகம வெளிநாடு சென்றுள்ளார்.

நிஷாந்த முத்து ஹெட்டிகம விமான நிலையத்தின் பிரமுகர்கள் நுழைவாயிலினூடாக பிரவேசித்த போது அவரை கைது செய்ய முடியாமல் போனதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் நிஷாந்த முத்து ஹெட்டிகம வெளிநாடு சென்றபோது கைது செய்யப்படமுடியாது போனாலும் அவர் நாடு திரும்புகையில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்