பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2014 | 1:13 pm

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து பல ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகாஸ்தென்ன தெரிவிக்கின்றார்.

திணைக்களத்திற்குட்பட்ட 73 நீர்த்தேக்கங்களில் 58 நீர்த்தேங்கங்கள் வான் பாய்ந்துயள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வாரமாக நாட்டின் பல பகுதிகளில் காணப்பட்ட இந்த நிலையானது தற்போது  ஹம்பாந்தோட்டை மொனராகலை மாவட்டங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,அம்பாறை, புத்தளம் அநுராதபுரம் ,குருநாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள பலநீர்த் தேக்கங்கள் வான் பாய்ந்துள்ளதால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகாஸ்தென்ன தெரிவிக்கின்றார்.

மேலும்,தெதுறுஓயா, கலா ஓயா, மல்வத்து ஓயா , மீ ஓயா மற்றும் மகாவலி கங்கை உள்ளிட்ட பல ஆறுகளின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. நீர்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகாஸ்தென்ன சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்