UPDATE: பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்வு

UPDATE: பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்வு

UPDATE: பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்வு

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2014 | 6:11 pm

பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

பதுளை ரில்பொல பகுதியில் ஐந்து வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். மேலும் பத்து பேர் மண்சரிவில் சிக்கி காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கல்கந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதோடு, ஹேகொட மண்சரிவில் இருவர் உயிரிழந்துள்ளனர். வரகாகொட பகுதியில் 52 வயதான ஒருவரும், கயிலகொட, பஹலகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பதுளை மஹியங்கனை வீதியின் சிறிகெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, ஹாலிஎல, உடுவர, சுபோதாகம பகுதியில் இரண்டு வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்டதில் மேலும் இரண்டு பேர் காணாமல்போயுள்ளனர்.

இதேவேளை, கண்டி பன்வில பிரதேச சபைக்குட்பட்ட கெலாபொக்க, வட்டகலை தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் 23 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இதனையடுத்து, 85 பேர் தற்காலிக இடமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்