நியூசிலாந்து அதிவேக ஆட்டம்; கன்னி போட்டியில் மறக்க முடியாத அனுபவம் பெற்ற தரிந்து கௌசால்

நியூசிலாந்து அதிவேக ஆட்டம்; கன்னி போட்டியில் மறக்க முடியாத அனுபவம் பெற்ற தரிந்து கௌசால்

நியூசிலாந்து அதிவேக ஆட்டம்; கன்னி போட்டியில் மறக்க முடியாத அனுபவம் பெற்ற தரிந்து கௌசால்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2014 | 12:55 pm

நீயூசிலாந்து அணியுடனான போட்டியில் இலங்கை அணி பாரிய பின்னடைவினை சந்தித்துள்ளது. முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது நீயூசிலாந்து அணி 81 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் 7 விக்கெட்டுக்களை இழந்து 429 ஓட்டங்களை பெற்றுள்ளது. 5.32 என்ற ஓட்ட விகிதத்துடனேயே இந்த ஓட்ட எண்ணிக்கையை இவர்கள் பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சினை தெரிவு செய்தது. நியூசிலாந்து அணி சார்பாக அணித்தலைவர் பிரண்டன் மெக்கலம் 195 ஓட்டங்களை வெறும் 134 பந்துகளை மாத்திரம் சந்தித்து 145.52 எனும் ஓட்ட வேகத்தில் பெற்றுக் கொண்டார்.

அத்துடன் வில்லியம்சன் மற்றும் நீசம் ஆகியோர் அரைச்சதம் கடந்து தலா 55 மற்றும் 85 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக மெத்தியூஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் தரிந்து கௌசால் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை பெற்றுக்கொண்ட போதிலும் தனது 22 ஓவர்களில் 159 ஓட்டங்களை ஓவருக்கு 7.22 ஓட்டங்கள் எனும் விகிதத்தில் வாரி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்