சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்க குழு நியமனம்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்க குழு நியமனம்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்க குழு நியமனம்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2014 | 6:29 pm

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தாமதமின்றி நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதியால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தலைமையில், இந்தக் குழு செயற்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படைகளின் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதி ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான நிதியை, உடனடியாக தயார்படுத்துமாறு திறைசேரிக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்