சக்தி – சிரச நிவாரண யாத்திரை மீண்டும்  ஆரம்பம்

சக்தி – சிரச நிவாரண யாத்திரை மீண்டும் ஆரம்பம்

சக்தி – சிரச நிவாரண யாத்திரை மீண்டும் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2014 | 11:54 am

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக சக்தி சிரச நிவாரண யாத்திரையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு சிரச ஊடக வலையமைப்பு மற்றும் ஜோன் கீல்ஸ் நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்துள்ளன.

எமது நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் குறித்த பகுதிகளிலுள்ள அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி நிவாரணங்களை விரைவில் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

சக்தி சிரச நிவாரண யாத்திரையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும், கலந்துரையாடல்களில் தீர்மானங்கள் எட்டப்பட்டதன் பின்னர் நிவாரண உதவிகளை வழங்கும் முறை தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் தெரிவிக்கின்றார்.

சக்தி சிரச நிவாரண யாத்திரை தொடர்பான சரியான திட்டங்கள் தீட்டப்பட்டதன் பின்னர் மக்களுக்கு இதுகுறித்து எமது ஊடகங்களின் ஊடாக அறிவிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்