இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் வாபஸ்

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் வாபஸ்

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் வாபஸ்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2014 | 6:17 pm

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி, இராமேஸ்வரம் மீனவர்கள் முன்னெடுத்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற மீனவ சங்க கூட்டத்தில் நாளைமுதல் கடலுக்குச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக எமது இராமேஸ்வரம் செய்தியாளர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் 11 மீனவ சங்கங்களின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், புத்தாண்டு காலத்தை கருத்திற்கொண்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்காதிருப்பதற்கும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக இராமேஸ்வரம் மீனவ சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.ஜே போஸ் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்