ஆழிப்பேரலைக்கு 10 வருடங்கள் (VIDEO)

ஆழிப்பேரலைக்கு 10 வருடங்கள் (VIDEO)

ஆழிப்பேரலைக்கு 10 வருடங்கள் (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2014 | 1:48 pm

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, இன்றுடன் பத்தாண்டுகள் கடந்துள்ள போதிலும், அதனால் ஏற்பட்ட ரணங்கள் இதுவரை மக்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை. இதுபோன்றதொரு நாளில், ஆழிப்பேரலையால் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவுகூரும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு – செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயத்தில் இன்று காலை பிரதேச மக்கள் அஞ்சலி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். சர்வ மதத்தவர்கள் கலந்துகொண்ட இந்த அஞ்சலி நிகழ்வில், ஆலய மணி ஒலிக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக, கிண்ணியா – புஹாரி பள்ளிவாசல் மற்றும் கடலூர் முருகன் கோவிலில் விசேட மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றுள்ளன. உயிர்நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காக கிண்ணியா புஹாரி பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.

மேலும், யாழ். மாவட்டத்திலும் விசேட அஞ்சலி நிகழ்வுகள் இன்று காலை ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். இதேவேளை, இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட சில நாடுகளும் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்