ஹங்வெல்லயில் வாகன விபத்து; மூவர் பலி

ஹங்வெல்லயில் வாகன விபத்து; மூவர் பலி

ஹங்வெல்லயில் வாகன விபத்து; மூவர் பலி

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 1:27 pm

கடுவெல – ஹங்வெல்ல வீதியின் ரணால பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

கடுவெலயில் இருந்து ஹங்வெல்ல நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்சொன்று, எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளரும், மேலும் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்