வாஜ்பாயை நேரில் சென்று வாழ்த்திய  மோடி

வாஜ்பாயை நேரில் சென்று வாழ்த்திய மோடி

வாஜ்பாயை நேரில் சென்று வாழ்த்திய மோடி

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 5:54 pm

90ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு நேரில் சென்று நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாயின் பிறந்த தினத்தை நல்லாட்சிக்கான தினமாக கொண்டாடுவதை விட அவருக்கு மரியாதை செலுத்த வேறு சிறந்த வழி எதுவும் இல்லை என நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 25ஆம் திகதி வாஜ்பாயின் பிறந்த தினத்தை நல்லாட்சிக்கான தினமாக கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்