வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தாழமுக்கமாக மாறியுள்ளது

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தாழமுக்கமாக மாறியுள்ளது

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தாழமுக்கமாக மாறியுள்ளது

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 9:27 am

நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தாழமுக்கமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதன்காரணமாக 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, தென்கிழக்கு தென் மாகாணங்களின் கடற்பிரதேசங்கள் அபாயகரமானதாகவும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றருக்கும் அதிகமாக வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை அம்பன் கங்கை பெருக்கெடுத்துள்ளமையால் நாவுல பிரதேசத்தின் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

நிலவும் மழையுடன் கூடிய வானிலையை அடுத்து சில மாவட்டங்களில் கற்கல் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் பாரிய அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு பிரவின் பிரதான ஆர் எம் எஸ்.பண்டார தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்