மைத்திரிபால சிறிசேனவின் பிரசார மேடை மீதான தாக்குதல் தொடர்பில் இருவர் கைது

மைத்திரிபால சிறிசேனவின் பிரசார மேடை மீதான தாக்குதல் தொடர்பில் இருவர் கைது

மைத்திரிபால சிறிசேனவின் பிரசார மேடை மீதான தாக்குதல் தொடர்பில் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 1:45 pm

வெல்லம்பிட்டிய, உமகிலிய விளையாட்டரங்கில் மைத்திரிபால சிறிசேனவின் பிரசார கூட்டத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட மேடை மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிதாரிகள் வருகைதந்ததாக கூறப்படும் வேன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் அடையாளங் காணப்பட்ட மேலும் 06 சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அங்கு கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

வெல்லம்பிட்டியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்