மாத்தளையில் சில கிராமங்கள் வௌ்ளத்தில் மூழ்கின; நுவரெலியாவிலும் மண்சரிவு அபாயம் (Photos)

மாத்தளையில் சில கிராமங்கள் வௌ்ளத்தில் மூழ்கின; நுவரெலியாவிலும் மண்சரிவு அபாயம் (Photos)

மாத்தளையில் சில கிராமங்கள் வௌ்ளத்தில் மூழ்கின; நுவரெலியாவிலும் மண்சரிவு அபாயம் (Photos)

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 11:31 am

போவதென்ன நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கபட்டுள்ளமையால் அம்பன் கங்கை பெருக்கெடுத்துள்ளது.

இதன் காரணமாக நாவுல உள்ளிட்ட மாத்தளை மாவட்டதின் சில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.

தற்போது நிலவும் கடும் மழையை தொடர்ந்து, நுவரெலியா மாவட்டத்தில் மூன்று பிரதான வீதிகளில் கற் பாறைகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதாக மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்தார்.

நுவரெலியா- வெலிமட, ராகல – வத்துமுல்லை மற்றும் நுவரெலியா – நானுஓயா ஆகிய வீதிகளில் இந்த அபாயம் நிலவுவதாகவும் மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த பிரதான வீதிகளின் தியனில்ல, பங்களாவத்த மற்றும் ஹக்கல ஆகிய பகுதகளில் மண்மேடுகள் சரிந்து விழும் கூடுதல் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

நுவரெலியா மாவட்டத்தின் பல வீதிகளில் கடும் பனி மூட்டம் நிலவுவதாகவும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் போக்குவரத்தில் ஈடுபடுமாறும் மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் சில தினங்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

matale flood 1 matale flood 2 matale flood 3 matale flood 4 matale flood 5 matale flood 6


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்