மல்வத்து ஓயா பெருக்கெடுத்தது; மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான்கதவுகள் திறப்பு

மல்வத்து ஓயா பெருக்கெடுத்தது; மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான்கதவுகள் திறப்பு

மல்வத்து ஓயா பெருக்கெடுத்தது; மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான்கதவுகள் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 4:32 pm

மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதால், மன்னார் கட்டுக்கரை குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.

இதனால் கட்டுக்கரை குளத்தை அண்மித்த கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏம்.ஏ.சீ.எம்.ரியாஸ் கூறுகின்றார்.

இதேவேளை, தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில், தெதுருஓயாவிற்கு இருமருங்கிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இடர் முகாமைத்துவ பிரிவுகளுக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டு, அதன் பிரகாரம் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட செயலாளர் எச்.எம்.பி.ஹிட்டிசேகர குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்