மட்டக்களப்பில் மைத்திரிபால சிறிசேனவின் பிரசார அலுவலகம் தீக்கிரை

மட்டக்களப்பில் மைத்திரிபால சிறிசேனவின் பிரசார அலுவலகம் தீக்கிரை

மட்டக்களப்பில் மைத்திரிபால சிறிசேனவின் பிரசார அலுவலகம் தீக்கிரை

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 2:12 pm

மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசார அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 12.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

நான்கு வாகனங்களில் வந்தவர்களால் தேர்தல் பிரசார அலுவலகத்தில் இருந்தவர்கள் துரத்தியடிக்கப்பட்டு, அலுவலகம் தீவைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவிக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்