பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 6:51 pm

நாட்டின் பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கவேண்டும் என நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார குறிப்பிடுகின்றார்.

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா, பதுளை, கேகாலை, கண்டி, மாத்ளை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பத்து மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவது தொடர்பில் மண்சரிவு ஆய்வுப் பிரிவினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு, கற்பாறை புரள்வுகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவியுள்ளதாக அந்த பிரிவின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்