சஜித்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் அச்சிட்ட அச்சகத்திற்கு சீல்

சஜித்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் அச்சிட்ட அச்சகத்திற்கு சீல்

சஜித்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் அச்சிட்ட அச்சகத்திற்கு சீல்

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 6:26 pm

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலான சுவரொட்டிகளை அச்சிட்ட அச்சகமொன்றிற்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

பொலிஸாருடன் கூட்டாக நடத்திய சுற்றிவளைப்பின்போதே அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டி, மொரகெட்டிய, பகுதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றையே அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது கைதான நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்