கொள்ளையடிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் நிவாரணங்களை வழங்குகிறது – மைத்திரிபால சிறிசேன

கொள்ளையடிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் நிவாரணங்களை வழங்குகிறது – மைத்திரிபால சிறிசேன

கொள்ளையடிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் நிவாரணங்களை வழங்குகிறது – மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 6:39 pm

வாக்குகளை கொள்ளையடிக்கும் நோக்கிலேயே தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

கெஸ்பேவ பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இதனைக் கூறினார்.

நாட்டின் உயர்மட்ட வர்த்தக துறையிலுள்ள அனைவரையும் அச்சுறுத்தி, அவர்களின் சுதந்திரத்தை இல்லாதொழித்து கப்பம் பெறும் ஒரு அரசாங்கமாக இந்த அரசாங்கம் மாறியுள்ளதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

விவசாயம் உள்ளிட்ட நாட்டின் தேசிய உற்பத்திகளை ஒழித்து, வெளிநாட்டு பல்தேசிய நிறுவனங்களின் ஊடாக சகலவற்றையும் நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒதுக்கப்படுகின்ற நிதியில் மூன்றில் ஒருபங்கின் மூலமே அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மதிப்பீட்டில் எஞ்சிய இரண்டு பங்கினையும் தத்தமது பைகளுக்குள் போட்டுக்கொண்டார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்குணர்ந்துள்ளனர் எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாள​ர் கூறினார்.

மக்களை திசைதிருப்பி, வாக்குக் கொள்ளையில் ஈடுபடுவதற்காகவே தற்போது அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படுவதாக மைத்ரிபால சிறிசேன குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்கி, அவர்களை வாக்கு கொள்ளைகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் குற்றஞ்சாட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்