கண்டியில் மண்மேடு சரிந்ததில் ஒருவர் பலி; மூவர் காயம்

கண்டியில் மண்மேடு சரிந்ததில் ஒருவர் பலி; மூவர் காயம்

கண்டியில் மண்மேடு சரிந்ததில் ஒருவர் பலி; மூவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 1:39 pm

கண்டி, முறுதலாவ பகுதியிலுள்ள வீடொன்றின் மீது ஏற்பட்ட மண்சரிவினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்கள் முறுதலாவையிலுள்ள தங்களின் உறவினர் வீடொன்றிற்கு சென்றிருந்த நிலையில், இரவு உறக்கத்திற்குச் சென்றபின்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடுகண்ணாவை பகுதியிலிருந்து இவர்கள் முறுதலாவையிலுள்ள தமது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்