இபோலாவை தடுக்க சியரா லியோனில் விசேட செயற்றிட்டம்

இபோலாவை தடுக்க சியரா லியோனில் விசேட செயற்றிட்டம்

இபோலாவை தடுக்க சியரா லியோனில் விசேட செயற்றிட்டம்

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 6:01 pm

இபோலா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் சியாரா லியோனின்  வடபிராந்தியத்தில் மூன்று நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் வர்த்தக நிலையங்கள் சந்தைகள் மூடப்பட்டுள்ளதுடன்  இபோலாவுடன் தொடர்புடைய சேவைகளைத் தவிர ஏனைய செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனிடையே இபோலா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக பொதுமக்களின் நத்தார் தினக் கொண்டாட்டங்களை சியாலா லியோன் ஏற்கனவே தடைசெய்துள்ளது.

மேற்கு ஆபிரிக்காவில் பரவியுள்ள இபோலா வைரஸினால் இதுவரை 7 ஆயிரத்து 500க்கும் அதிகமானவர்கள் உயிரிந்துள்ளதாக கூறியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அதிகளவில் சியாரா லியோனே பாதிக்கப்பட்டுள்ளதாக  சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்