இனிய நத்தார் தின வாழ்த்துகள் (VIDEO)

இனிய நத்தார் தின வாழ்த்துகள் (VIDEO)

இனிய நத்தார் தின வாழ்த்துகள் (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 9:58 am

இறைமகனாம் இயேசு பிரான் பிறந்த தினமான இன்று நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் நியூஸ்பெஸ்ட் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

இயேசுநாதரின் பிறப்பைக் கொண்டாடும் மற்றுமொரு நத்தார் பண்டிகை நள்ளிரவு மலர்ந்துள்ளது.

நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக இலங்கை உட்பட உலக வாழ் கிறிஸ்தவர்கள் நள்ளிரவு தேவ ஆராதனைகளில் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டின் சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்றிரவு இடம்பெற்ற திருப்பலி ஆராதனைகளில் பெருமளவிலான மக்கள் பங்குபற்றியிருந்ததாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

வரலாறு
”இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” – ஏசாயா 7.14

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்க்கதரிசிகளினால் உரைக்கப்பட்ட வார்த்தையின் படி, வாக்களிக்கப்பட்ட மேசியா பாவத்தில் வாழும் மனிதனை மீட்க பிறந்த தினம் கிறிஸ்மஸ் என அழைக்கப்படுகின்றது.

பெத்லகேம் எனும் ஊரில் மிகவும் ஏழ்மையாக  இயேசு பாலகன் மாட்டு தொழுவத்தில் பிறந்தார்.

அப்பொழுது அந்த நாட்டிலே மேய்பர்கள் வயல்வெளியில் தங்கி இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக்கொண்டிருந்தார்கள்.

அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான். கர்த்தருடைய மகிமை அவர்களை சுற்றிலும் பிரகாசித்தது.

அப்போது மேய்ப்பர்கள் மிகவும் பயந்தார்கள்.

அப்போது தேவ தூதன் அவர்களை நோக்கி பயப்படாதிருங்கள் இதோ எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு  அறிவிக்கின்றேன்.

இன்று கர்த்தராகிய கிறிஸ்து எனும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கின்றார். பிள்ளையை துணிகளில் சுற்றி முன்னணையிலே கிடத்தியிருக்க காண்பிர்கள் என்ற அந்த நற்செய்தி இவ்விதமாக மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து மேய்ப்பர்கள் தீவிரமாய் வந்து மரியாளையும் யோசேப்பையும் முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.

அந்த சந்தர்ப்பத்தில் பிள்ளையை குறித்து தங்களுக்கு சொல்லப்பட்ட சங்கதியை பிரசித்தம் பண்ணினார்கள்.

மேய்ப்பராலே தங்களுக்கு சொல்லப்பட்டதை கேட்ட யாவரும் அவைகளை குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

அதனை தொடர்ந்து மேய்ப்பர்கள் தங்களுக்கு சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி துதித்துக்கொண்டு திரும்பி போனார்கள்.

இதன் மூலம் அனைவருக்கும் மிகுந்த சந்தோஷமும் சமாதானமும், அன்பும்  மனுஷர் மத்தியில் ஏற்படவேண்டும் என்பதே இந்த கிறிஸ்மஸ் தினத்தில் இயேசு கிறிஸ்த்து அனைவரிடமும் எதிர்ப்பார்க்கின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்