இந்திய அணிக்கு வெளிநாட்டில் வெற்றிபெற முடியுமென்ற நம்பிக்கை இல்லை – ஹெய்டன்

இந்திய அணிக்கு வெளிநாட்டில் வெற்றிபெற முடியுமென்ற நம்பிக்கை இல்லை – ஹெய்டன்

இந்திய அணிக்கு வெளிநாட்டில் வெற்றிபெற முடியுமென்ற நம்பிக்கை இல்லை – ஹெய்டன்

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 6:05 pm

வெளிநாட்டு மண்ணில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இன்மையே  இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய பலவீனம் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெத்திவ் ஹெய்டன் தெரிவித்துள்ளார்.

நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சியின் போது உபாதைக்கு உள்ளான ஷீக்கர் தவான் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாட முன்வராமை இந்தியாவின் பயந்த அணுக்குமுறையை பிரதிபலிப்பதாக ஹெய்டன் கூறியுள்ளார்.

ஸ்ரிவ் வோ போன்ற சிறந்த வீரர்கள் இவ்வாறான செயற்பாடுகளை தமக்கு சாதமாக பயன்படுத்தியிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்