ஹம்பாந்தோட்டை நகர மேயர் பிணையில் விடுதலை

ஹம்பாந்தோட்டை நகர மேயர் பிணையில் விடுதலை

ஹம்பாந்தோட்டை நகர மேயர் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 4:58 pm

வீதி நாடக குழு மற்றும் ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் ரவீந்ர பெர்னான்டோ இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேச அரச ஊழியர்கள் இருவர் அவரது பிணைக்கு கைச்சாத்திட வேண்டுமென நீதவான் நிபந்தனை விதித்திருந்தார்.

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் எராஜ் ரவீந்ர பெர்னான்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்