வலப்பனை பிரதேசத்தில் மண்சரிவு அபாயம்; 60 குடும்பங்கள் வெளியேற்றம்

வலப்பனை பிரதேசத்தில் மண்சரிவு அபாயம்; 60 குடும்பங்கள் வெளியேற்றம்

வலப்பனை பிரதேசத்தில் மண்சரிவு அபாயம்; 60 குடும்பங்கள் வெளியேற்றம்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 12:08 pm

நுவரெலியா வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் லியன்வளை தோட்டத்தில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் 60 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் ஒருசிலர் அதற்கு கட்டுப்படாமல் மண் சரிவு அபாயம் உள்ள வீடுகளிலேயே தங்கியுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி கூறியுள்ளார்.

அவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு மீண்டும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இராகலை வத்துமுல்ல பிரதான வீதியில் மண் சரிவு அபாயம் நிலவுவதால் அந்த வீதியை பயன்படுத்த வேண்டாம் என தேசிய கட்டட ஆய்வு நிலையமும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் அறிவித்துள்ளதாக மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார்.

மீனாகலை பகுதியிலும் மண் சரிவு அபாயம் காரணமாக 15 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

புறூக்சைட் பகுதியிலும் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்