மைத்திரிபாலவின் பிரசார மேடை மீதான தாக்குதல் சம்பவம்; கடமை தவறிய பொலிஸார் பணி இடைநிறுத்தம்

மைத்திரிபாலவின் பிரசார மேடை மீதான தாக்குதல் சம்பவம்; கடமை தவறிய பொலிஸார் பணி இடைநிறுத்தம்

மைத்திரிபாலவின் பிரசார மேடை மீதான தாக்குதல் சம்பவம்; கடமை தவறிய பொலிஸார் பணி இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 5:05 pm

வெல்லம்பிட்டிய, உமகிலிய விளையாட்டரங்கில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் கடமையை உரியவகையில் நிறைவேற்றத் தவறியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய பொலிஸின் உப பொலிஸ் பரிசோதகரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

இடைநிறுத்தப்பட்டுள்ள  இரண்டு உத்தியோகத்தர்களுக்கும் எதிராக ஒழுங்காற்று விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிதாரிகளின் வாகனம் உட்பட பல்வேறு தகவல்கள் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் குழுவிற்கு கிடைத்துள்ளதாக அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், கடமையை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு தவறியிருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருந்த பிரசார கூட்டமொன்றிற்காக அமைக்கப்பட்ட மேடை மீது இன்று அதிகாலை இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்