மைக்கல் க்ளார்கின் மற்றுமொரு அவதாரம் நாளை மறுதினம்?

மைக்கல் க்ளார்கின் மற்றுமொரு அவதாரம் நாளை மறுதினம்?

மைக்கல் க்ளார்கின் மற்றுமொரு அவதாரம் நாளை மறுதினம்?

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 2:44 pm

உபாதைக்குள்ளான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் மைக்கல் க்ளார்க் இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நேரடி வர்ணனையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

காலில் ஏற்பட்ட உபாதையால் சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட மைக்கல் க்ளார்க் இந்திய அணியுடனான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

எனினும் பொக்சிங்டே என வர்ணிக்கப்படும் டிசம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக செயற்படுவதில் மகிழ்ச்சியடைவதாக மைக்கல் க்ளார்க் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயிற்சிப் போட்டியில் தலையில் ஏற்பட்ட காயத்தினால்  போட்டிகளில் இருந்து விலகியிருந்த ஷேன் வொட்சன், நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள போட்டியில் பங்கேற்வுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்