மிஹின் லங்கா ஆரம்பிக்கப்பட்டது ஏன்?; ஜனாதிபதி விளக்கம்

மிஹின் லங்கா ஆரம்பிக்கப்பட்டது ஏன்?; ஜனாதிபதி விளக்கம்

மிஹின் லங்கா ஆரம்பிக்கப்பட்டது ஏன்?; ஜனாதிபதி விளக்கம்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 6:28 pm

மனிதாபிமான நடவடிக்கையின் போது தன்னுடன் பாதுகாப்பு சபையில் இருந்த ஒரேயொரு அரசியல்வாதி ரத்னசிறி விக்ரமநாயக்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

இங்கிரியவில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரசார கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க மற்றும் சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

[quote]பிரச்சினை தீர்க்கப்பட்ட போது பாதுகாப்பு சபையில் என்னைத்தவிர ஒரேயொரு அரசியல்வாதியே இருந்தார். அவரே பிரதமராக இருந்த ரத்னசிறி விக்ரமநாயக்க. வேறு எவரும் இருக்கவில்லை.எவரையும் அழைக்கவில்லை, இல்லாவிட்டால் தற்போது சிலர் பல்வேறு விடயங்களைக் கூறியிருப்பார்கள். அந்த பணி நிறைவடைந்து அபிவிருத்திப் பணிகளுக்காக மக்கள் மத்தியில் வந்தோம். துறைமுகங்களை அமைத்தோம், விமான நிலையத்தை அமைத்து மிஹின் லங்காவையும் ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டது. 2007 நான் இங்கிலாந்திற்கு சென்று இலங்கைக்கு வர விமான டிக்கட்டுக்களை கேட்டபோது எனக்கு ஒரு டிக்கட்டையே வழங்க முடியும் என்று கூறினர். பாதுகாப்பு உத்தியோக்கர் ஒருவருக்கு கூட ஜனாதிபதியுடன் செல்ல முடியவில்லை. விமான நிறுவனத்தின் உரிமை இலங்கைக்கு இருந்த போதிலும் அது விற்கப்பட்டது. அதன் காரணமாகவே மிஹின் லங்கா சேவையை ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டது. அதன் காரணமாகவே அதனை பணம் கொடுத்து பெற்றோம்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்