மஹிந்த ராஜபக்ஸ மற்றும் மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் நேரடி விவாதம்?

மஹிந்த ராஜபக்ஸ மற்றும் மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் நேரடி விவாதம்?

மஹிந்த ராஜபக்ஸ மற்றும் மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் நேரடி விவாதம்?

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 10:04 am

இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையே பகிரங்க விவாதமொன்றை நடாத்துவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குழுவொன்றை நியமித்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய இது குறித்து தெளிவுபடுத்தினார்.

[quote]இந்த விவாதத்தில் சட்டவாதிக்கம், நீதிமன்ற சுயாதீனம், இலஞ்சம், ஊழல்  என்பன இங்கு தலைப்புக்களாக வழங்கப்படுகின்றன. இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தில் நிபுணர் குழுவொன்றை அமைத்து இதன் தலைமைத்துவத்தை பிரதித்தலைவர் பிரசன்ன ஜயவர்தனவுக்கு வழங்கியிருக்கின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் நேற்று அழைப்பிதழ் அனுப்பியுள்ளோம். இந்த விவாத்திற்கு ஜனவரி மாத்தில் 2 ஆம் திகிதியிலிருந்து 5 ஆம் திகதிக்குள் ஒரு நாளை தெரிவு செய்வோம்.[/quote]

இதேவேளை, தேர்தல் சட்டத்தை பாதுகாக்க அரச அதிகாரிகள் தவறினால் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாகவும் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய இதன்போது குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்