மரண தண்டனை நிறைவேற்றத்தை பாகிஸ்தான் உடனடியாக இடைநிறுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

மரண தண்டனை நிறைவேற்றத்தை பாகிஸ்தான் உடனடியாக இடைநிறுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

மரண தண்டனை நிறைவேற்றத்தை பாகிஸ்தான் உடனடியாக இடைநிறுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 5:57 pm

பாகிஸ்தான் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றத்தை அமுல்படுத்தியுள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றத்தை பாகிஸ்தான் உடனடியாக இடைநிறுத்த வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான பேராட்டத்தில் மரண தண்டனை நிறைவேற்றம்  திறன் மிக்க ஆயுதம் அல்லவென பாகிஸ்தானுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஸ்தான் ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 500 கிளர்ச்சியாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பேஷாவாரியிலுள்ள பாடசாலையொன்றின் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 134 சிறுவர்கள் உள்ளிட்ட 141 பேர் கொல்லப்பட்டதை அடுத்து மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் கடந்த வாரம் நீக்கியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்