நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் 5 வேகப்பந்து வீச்சாளர்கள் இணைப்பு; சமிந்த வாஸ் அறிவிப்பு

நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் 5 வேகப்பந்து வீச்சாளர்கள் இணைப்பு; சமிந்த வாஸ் அறிவிப்பு

நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் 5 வேகப்பந்து வீச்சாளர்கள் இணைப்பு; சமிந்த வாஸ் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 3:18 pm

நியூஸிலாந்து அணியுடனான கிரிக்கெட் போட்டிகளுக்காக தமது அணியில்  வேகப்பந்துவீச்சாளர்களை இணைத்துள்ளதாக வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் தெரிவிக்கின்றார்.

இதன்பிரகாரம் சுரங்க லக்மால், சமிந்த எரங்க, தம்மிக பிரசாத், நுவன் பிரதீப் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், இறுதி பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி இன்று பங்கேற்கவுள்ளதாக அணியின் முகாமையாளர் மைக்கல் டி சொய்சா ஸ்போர்ட்ஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இதேவேளை நியூஸிலாந்தில் நிலவும் காலநிலை மற்றும் ஆடுகளத்தை கருத்திற்கொண்டு வேகப்பந்து வீச்சார்கள் சிறப்பாக செயற்படுவார்கள் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக சமிந்த வாஸ் நேற்று நடைபெற்ற ஊடகவியலளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள முலாவது டெஸ்ட் போட்டியை காண்பதற்கு 8,000ற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருவார்கள் என நியூசிலாந்து கிரிக்கட் சபை தெரவித்துள்ளது.

க்ரைஸ் சர்ச் ஹெக்லி ஓவலில் நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டி இதுவென்பதுடன் நியூசிலாந்தில் டெஸ்ட் அந்தஸ்துள்ள 8ஆவது மைதானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்