தபால் மூல வாக்களிப்பு அமைதியாக நடைபெற்றது – தே.செ

தபால் மூல வாக்களிப்பு அமைதியாக நடைபெற்றது – தே.செ

தபால் மூல வாக்களிப்பு அமைதியாக நடைபெற்றது – தே.செ

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 6:23 pm

ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு அமைதியான முறையில் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

தபால்மூல வாக்களிப்பின் போது குறிப்பிடத்தக்க எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாச தெரிவித்தார்.

நேற்றும், இன்றும் நடைபெற்ற தபால்மூல வாக்களிப்பில் பங்குபற்ற முடியாமல் போனவர்கள், எதிர்வரும் 30 ஆம் திகதி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தங்களின் வாக்குகளை அளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்த இரண்டு நாட்களிலும் வாக்குகள் அடையாளமிடப்படாத வாக்குச் சீட்டுகளை தேர்தல்கள் செயலகத்தின் கண்காணிப்பாளர்கள் ஊடாக பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாச மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்