சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 77,000ஆக அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 77,000ஆக அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 77,000ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 2:32 pm

பலத்த மழையுடன் கூடிய வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால், இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 77,331 ஆக அதிகரித்துள்ளது.

298 தற்காலிக முகாம்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் மழையினால் 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், வீதிகளூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ரியாஸ் தெரிவித்தார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்