சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி வருமானத்திற்கு வருமான வரி நீக்கம்; 25,000 வரை வட்டி வருமானம் பெற வாய்ப்பு

சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி வருமானத்திற்கு வருமான வரி நீக்கம்; 25,000 வரை வட்டி வருமானம் பெற வாய்ப்பு

சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி வருமானத்திற்கு வருமான வரி நீக்கம்; 25,000 வரை வட்டி வருமானம் பெற வாய்ப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 12:22 pm

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி வருமானம், வருமான வரியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருவு செலவுத் திட்ட யோசனையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய சிரேஷ்ட பிரஜைகள் அரச வங்கிகளில் வைப்பிலிட்டுள்ள 2.5 மில்லியன் ரூபா வரையான நிலையான வைப்பீடுகளுக்காக மாதாந்த வட்டி வருமானமாக 25 ஆயிரம் ரூபா கிடைக்கும் வகையில் 12 வீத வட்டி ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து வழங்கப்படவுள்ளது.

இதற்கான வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக உரிய வங்கிகளுடன் தொடர்புகொண்டு வினவுமாறு தகமையுள்ள சிரேஷ்ட பிரஜைகளிடம் நிதி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்