ஐ.தே.க தலைமையகம் முன்பாக முன்னெக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை

ஐ.தே.க தலைமையகம் முன்பாக முன்னெக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை

ஐ.தே.க தலைமையகம் முன்பாக முன்னெக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 11:43 am

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டபோது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.

இந்த அமைதியின்மை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அமைதியின்மையை அடுத்து சிறிகொத்தவை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

தற்போது பொலிஸாரும், கலகத் தடுப்புப் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்